வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்

70பார்த்தது
வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்
கோவை: வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர் காலை சரமாரியாக கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அப்பகுதியினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று,
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு வனத்துறையினர் ரூ.10,000 நிதி உதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி