விஜயகாந்திற்கு மதுரையில் சிலை.. மேயர் சொன்ன பதில்

2893பார்த்தது
விஜயகாந்திற்கு மதுரையில் சிலை.. மேயர் சொன்ன பதில்
விஜயகாந்துக்கு மதுரையில் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைத்திருந்தார். இதுகுறித்து மாநகர மேயருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து பேசிய மதுரை மாநகர மேயர் இந்திராணி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம் தனக்கு கிடைத்தது எனவும், மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து அரசிற்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி