விஜய் கட்சியில் வெடித்த புதிய பிரச்னை

103614பார்த்தது
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் முறையாக ஒரு எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. நிர்வாகிகளை நியமிப்பதில் மாவட்ட பொறுப்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக குமாரபாளையம் நகர மகளிர் அணித் தலைவி பிரேமலதா குற்றம்சாட்டியிருக்கிறார். பல ஆண்டுகளாக சொந்த செலவில் ரசிகர் இயக்கப் பணி செய்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் பேட்டியளித்திருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பித்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது கட்சிக்குள் பிரச்னை வெடித்துள்ளது.

நன்றி: News Tamil