ஆகஸ்ட் 29-ம் தேதி, மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஆகஸ்ட் 26 முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.