திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அம்பாள் தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து, ஸ்ரீசிறுபிடியீசர், ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரர் என்ற திருநாமங்களோடு வழிபட்ட தலம் இது. புதிதாக வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து செல்கிறார்கள்.