வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 14% கூடுதலாக பதிவாகியுள்ளது என வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "15 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை மட்டுமே இருக்கும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது சில இடங்களில் கனமழை பெய்யும்" என தெரிவித்துள்ளார்.