ஒரு கரண்டியில் கற்பூரங்களை தூளாக்கி, சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து அடுப்பில் சூடாக்க வேண்டும். கற்பூரம் கரைந்ததும் இந்த கரைசலை ஒரு வெற்றிலை மீது தடவ வேண்டும். வெற்றிலை இதமான சூடாகும் வரை நெருப்பில் வாட்டி, நெஞ்சின் மேல் பத்து போட்டுக் கொள்ள வேண்டும். இதை இரவில் தூங்கும் பொழுது செய்தால், நெஞ்சில் கட்டி இருக்கும் சளி இளகி வெளியேறும். எந்த காரணம் கொண்டும் அதிக சூடான வெற்றிலைகளை நெஞ்சு மேல் போட்டு விடக்கூடாது.