காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய 2 பஸ்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. எறையூரில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிவந்த பஸ்சும், நாவலுாரிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பஸ்சும் வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் மறுபுறம் உள்ள சாலைக்கு திரும்பின. அப்போது ஜல்லி ஏற்றி வந்த லாரி பஸ்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.