ஈரோடு மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுமாத்தூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் தனது குழந்தையை குமார் என்பவர் அடித்து கொன்ற நிலையில் தலையில் அடிப்பட்டு குழந்தை உயிரிழந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதனை தொடர்ந்து குமாரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.