சென்னை மதுரவாயலில் நடராஜன் என்பவர் தனது மின்சார வாகனத்தை சார்ஜ் போடும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் நடராஜனின் மகன் கவுதம், அவர் மனைவி மஞ்சு, 9 மாத குழந்தை எழிலரசி ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை எழிலரசி உயிரிழந்தது. மஞ்சு மற்றும் கௌதம் தொடர் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.