சென்னையில் 2 நாட்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவுப் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்த கார் பந்தயத்தை அமைச்சர் பொன்முடி நேரில் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தியிருப்பது பெருமைக்குரியது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தான் காரணம்” என்றார்.