விவசாயி வீட்டிற்கு விருந்தாளியாக வந்த முதலை

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விவசாயி ஒருவர் வீட்டிற்குள் முதலை புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மகாராஜபுரம் என்னும் கிராமத்தில் காந்திராஜ் என்ற விவசாயி வீட்டருகே திடீரென முதலை புகுந்துள்ளது. வீட்டில் பின்புறம் முதலை படுத்திருந்துள்ளது. அதனை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்து கணவரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து 3 அடி முதலையை கயிறு கட்டி பிடித்தனர். இதனையடுத்து அந்த முதலையை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி