டிவைடரில் மோதிய கார்.. பற்றி எரிந்த தீ..

79பார்த்தது
டெல்லி கம்பூர் பாரத் பெட்ரோல் பம்ப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதியது. மோதிய வேகத்தில் காரில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. உடனே காரில் இருந்த ஓட்டுநர் சிறிய காயங்களுடன் தப்பி வெளியே வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி