தடுப்பணை விவகாரம் - பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

50பார்த்தது
தடுப்பணை விவகாரம் - பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (மே 23) கடிதம் எழுதியுள்ளார். அதில், “தடுப்பணை கட்டுவது தொடர்பாக திட்ட விவரங்களை தமிழக அரசுக்கும், காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திடமும் தெரிவிக்கவில்லை. தடுப்பணையால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து குறையும் என தமிழக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தடுப்பணை கட்டும் பணியை கேரளா நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையே தோழமை உணர்வை நிலை நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி