கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்றுடன் (மே 23) ஓய்வு பெற இருக்கிறார். இதற்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதில் மிகுந்த திருப்தி” என உருக்கமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பு ஏற்க இருக்கிறார்.