இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், கார் ஒன்று வெட்ட வெளியில் நிற்கிறது. அந்த கார் முழுவதுமாக ஒரு ரூபாய் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கார் முழுவதும் பார்ப்பதற்கு எதோ வெள்ளி முலாம் பூசப்பட்ட காரை போலக் கொளுத்தும் வெயிலில் ஜொலிக்கிறது. அந்த காரின் கண்ணாடிகள், டயர் மற்றும் லைட்டுகளை தவிர வாகனம் முழுவதும் ஒரு ரூபாய் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.