கொடி ஏற்றியபோது பாஜக தொண்டர் தவறி விழுந்து பலி

546பார்த்தது
கொடி ஏற்றியபோது பாஜக தொண்டர் தவறி விழுந்து பலி
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கொடி ஏற்றியபோது பாஜக தொண்டர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். ஆழிமாவு ஓடலி சேகர் என்பவரது மகன் ஸ்ரீரங்கன் (57) என்பவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்கிழமை நாத்திகை மண்டலத்தில் இருந்து சுரேஷ்கோபியின் சுற்றுப்பயணம் ஆழிமாவிலில் உள்ள ஞாடுவெட்டி உன்னிக்குட்டன் வீட்டில் இருந்து தொடங்க இருந்தது.

திங்கட்கிழமை இரவு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. ஸ்ரீரங்கன் திருச்சூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை உடல் தகனம் செய்யப்படுகிறது.