சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று (அக். 26) கார் ஒன்று வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அதன் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.