தமிழகத்தில் இன்று முதல் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

53பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூர்த்த நாளான இன்று (ஏப்ரல் 5), வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும். இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 925 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி