ஒரே பாணியில் 9 பெண்கள் கொலை.. போலீஸ் விசாரணை

75பார்த்தது
ஒரே பாணியில் 9 பெண்கள் கொலை.. போலீஸ் விசாரணை
உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் கழுத்தை நெரித்து, ஆடை இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால், அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்கள் அனைவரும் 45-55 வயதுடையவர்கள். இந்த 9 கொலைகளும் ஓரே மாதிரியாக நடந்துள்ளது. யாரேனும் திட்டமிட்டு கொலைகளைச் செய்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி