பிப்.23ஆம் தேதி 8 தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகின்றன. பைரி, பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம், வித்தைக்காரன் ஆகிய 8 படங்கள் வெளியாகின்றன. இந்த 8 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள் ஆகும். இதுதவிர, மின்னலே, 96, வாரணம் ஆயிரம், பிரேமம் உள்ளிட்ட படங்களும் ரி ரீலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் ரஜினி, அஜித் படங்கள் வெளியாகும் என்பதால் அதற்கு முன்பாகவே மேலும் சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.