சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிக்கு நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. ஷாங்காயில் உள்ள ஹூஷன் மருத்துவமனையின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லிவி, தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை மூலம் இதை செய்தார்.