பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

55பார்த்தது
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கைபர் பழங்குடி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடத் தொடங்கினர். இந்த தேடுதல் வேட்டையின்போது நடந்த துப்பாக்கி சண்டையில், 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி