4 சிறுமிகளின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்

55பார்த்தது
4 சிறுமிகளின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் குடுகுடுப்பு சமூகத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத 4 சிறுமிகளுக்கு ஒரே இடத்தில் இன்று (ஜூன் 17) திருமணம் நடைபெற உள்ளதாக சமூகநல பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளிடம், பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேசி பெற்றோர்களை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நான்கு சிறுமிகளை வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி