பக்ரீத் பண்டிகை: நாகூரில் சிறப்பு தொழுகை

54பார்த்தது
பக்ரீத் பண்டிகை: நாகூரில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் இஸ்லாமியர்கள் நேற்று (ஜூன் 16) சிறப்புத் தொழுகை நடத்தினர். ஜாக் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஜாக் அமைப்பின் மாநிலச் செயலாளர் அன்சாரி பிர்தவுசி, பக்ரீத் பண்டிகை தொடர்பான உரை நிகழ்த்தி வாழ்த்து கூறினார்.