பாகிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் புதன்கிழமை பிற்பகல் 2.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.