உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

53பார்த்தது
உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு நிலுவையில் இருக்கும் போது, உண்மை சரிபார்ப்பு குழுவை செயல்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.