உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகை - ஏற்பாடுகள் தீவிரம்

58பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகை  - ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, அண்ணா நகரில் உள்ள ட்வின்ஸ் மஹாலில் இன்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற 24ஆம் தேதி மதுரை நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும் தேர்தல் பரப்புரை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் திமுக நகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், திமுகவின் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி