பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கரை 40 பெரு நிறுவனங்கள் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 மீ பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இன்று 3-வது பதக்கத்தை உறுதி செய்து சாதனை படைத்துள்ள மனு பாக்கரை, இதுவரை 40 நிறுவனங்கள் தங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் ஒப்பந்தத்தை முன்வைத்து அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.