சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 4 கவுன்சிலர்களின் பதவியை பறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "சென்னையின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.