பண்டிகை காலத்தை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

82பார்த்தது
பண்டிகை காலத்தை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க 34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மொத்தம் 302 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, இந்திய ரயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி