மியான்மர் நிலநடுக்கத்தில் மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் மரணத்தை வென்று உயிர்பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மண்டலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட 75 வயது பாட்டியும் அவரது 16 மற்றும் 13 வயது பேரக்குழந்தைகளும் 15 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் உயிர் பிழைத்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.