நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். 7 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 5வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்துள்ளார்.