பாகிஸ்தானில் திங்கள்கிழமை பயங்கர விபத்து நடந்தது. ராவல்பிண்டியில் இருந்து பாலாந்த்ரிக்கு சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அது கஹுதாவுக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் உயிரிழந்தனர். பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.