அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு 209 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ், 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அபிஷேக் போரெல் - 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் - 57*, சாய் ஹோப் - 38, ரிஷப் பண்ட் - 33 ரன்கள் அடித்தனர்.