சேலத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள், அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய இடம் என்பதை அடித்துக் கூறுகின்றனர். மேலும், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொக்கிஷம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.