இளைஞர் மரணம்.. மருத்துவமனைக்கு சீல்

52பார்த்தது
இளைஞர் மரணம்.. மருத்துவமனைக்கு சீல்
எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்ற புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர் சிகிச்சை ஆரம்பித்த 15 நிமிடத்தில் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக சென்னை பம்மலில் உள்ள BP ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் BP ஜெயின் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை கருவிகள் போதுமான அளவில் இல்லை என்பதே என கூறப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி