முரசொலி விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என கடந்த 2019ஆம் ஆண்டில் வேலூரில் பாஜக மாநில தலைவராக இருந்த போது, எல்.முருகன் இது பற்றி பேசியிருந்தார். இதனையடுத்து முரசொலி அறக்கட்டளை சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.