இன்றைய ராசி பலன் - Rasipalan

இன்றைய ராசிபலன் 18-08-2023

மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் எல்லாவற்றிலும் அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும். தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கில் ஈடுபட்டு இன்று அமைதியாக இருங்கள். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் செயல்களை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியது அவசியம். இன்று அமைதியில்லாமல் காணப்படுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் பொறுமையாக இருக்க வேண்டும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் மூலம் நல்லது நடக்கும். உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பீர்கள். உங்களின் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும். நிதிநிலைமை செழிப்பாக இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்திற்காக உங்களை முன்னேற்றிக் கொள்ளும் வழி வகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான போக்கை தவிர்ப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தாய் அல்லது சொந்தக்காரர்கள் உடல் வலியை அனுபவிப்பார்கள். பதட்டம் காரணமாக உங்கள் கால்களில் வலி ஏற்படலாம். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை தரும் எண்ணங்களை தவிர்த்து நேர்மறையாக எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள். இதனால், இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும் என்பதால் பேசும் முன் யோசித்து பேசுங்கள். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த கடவுளிடம் பிரார்தனை மேற்கொள்ளுங்கள். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகளால் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். உங்கள் இனிமையான வார்த்தை மூலம் நெருக்கமானவர்களின் இதயத்தில் நல்ல இடம் பிடிப்பீர்கள். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த சூழ்நிலையை நீங்கள் எளிதாக சமாளிக்கலாம். உங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இன்று மகிழ்சிகரமான நாளாக காணப்படாது என்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். ஜல தோஷம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று நல்ல நாள். உங்கள் துணையுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் சில மறக்க முடியாத தருணங்கள் ஏற்படும்.