இன்றைய ராசிபலன் 08-08-2023

52809பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. அதே சமயம் குடும்ப சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களது மனதில் பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. கவனமாக இருப்பது நல்லது. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுத்தால் அது வெற்றியடையும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வாய்ப்பு உள்ளது. மேலும். தொலைதூரத்திலிருந்து இன்று உங்களுக்கு நற்செய்திகள் வரும். தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள். சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக ஈடுபாடு செய்தால் உங்களுக்கு அமைதியை கிடைக்கும். இன்று எவ்வித செயலில் ஈடுபௌம் முன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் பல தடைகளைக் கடந்த பிறகு உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள். இன்று நீஙகள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனத்துடன் கையாள வேண்டும். கவலைகளை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். துலாம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கான நல்ல நாள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரம் சிறந்த முறையில் இருப்பதற்கான சில கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நிலை ஏற்படும். குறைந்த முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிக்க நல்ல நாள். நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க உகந்த நாள். அரசியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படும். தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். இதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் சில பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் இன்று நீங்கள் பொறுமை கடைபிடிப்பது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் தேவையற்ற கவலைகளை நீக்கி விடுங்கள். மன அமைதிக்கு தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. கும்பம்: இந்த ராசிக்காரர்கள் இன்று மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் பல வாயப்புகளை நீங்கள் இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய நாளை நிர்வகிக்க சரியான திட்டமிடல் வேண்டும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிகம் உணர்ச்சி வசப்பட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி