இன்றைய ராசிபலன் (01-08-2023)

63000பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ரிஷபம்: புதிதாக எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். திடீர் செலவுகளால் நெருக்கடி அதிகரிக்கும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது மிகவும் அவசியம். மிதுனம்: இன்று மனம் அமைதியாக காணப்படும். ஆரோக்கியமாய் இருக்க உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வீட்டில் நடைபெறும் சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். கடகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவ - மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதில் காணப்படும் திருப்தி காரணமாக நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிம்மம்: வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இன்று அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கன்னி: இன்று உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் ஏற்படும். துலாம்: இன்றைய செயல்கள் யாவும் சுமூகமாக அமையும். மன அமைதிக்கு கோயிலுக்கு சென்று வாருங்கள். உடன் பிறந்த சகோதரன், சகோதரி மூலம் அனுகூலம் ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணியிடச் சூழல் உற்சாகத்தை அளிக்கும். தனுசு: இன்று அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். தூக்கமின்மை காரணமாக உடல்நிலை பாதிக்கப்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மகரம்: இன்று சில எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை ஏற்படுத்தும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சில சிக்கல் ஏற்படும். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. கும்பம்: இன்று நாள் முழுவதும் சோம்பலாக காணப்படுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். மீனம்: இன்று உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருவதன் மூலம் குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நீங்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி