மேஷம்: இந்த நாள் உங்களுக்கு பொருளாதார வசதி திருப்தியாக இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதை சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையாக இருப்பது அவசியம். வீட்டில் நடைபெற உள்ள சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக முடியும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக காணப்படும்.
ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
மிதுனம்: இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கொடுத்த கடன் திரும்பி வரக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் பிள்ளைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்படும். அதிக உழைப்பின் காரணமாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
கடகம்: வீட்டில் தேவையில்லாத விஷயங்களால் மனஸ்தாபம், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சிலருக்கு சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
சிம்மம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், போதுமான பணவரவு இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காதலர்களுக்கு திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி: இன்று நீங்கள் மிகவும் சாந்தமாக இருப்பது நல்லது. குடும்பம் சம்பந்தமான காரியங்களுக்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். எந்த ஒரு புதிய முடிவை எடுக்கும் போதும் நன்றாக யோசித்து எடுக்கவும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்: இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் அதிகாரிகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் மனக்கசப்பு ஏற்படும்.
விருச்சிகம்: பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பெண் அல்லது பிள்ளையின் திருமணம் தொடர்பான முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: நீண்டகாலமாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
மகரம்: நினைத்த செயலை இன்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும், வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. நீண்ட தூரம் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
கும்பம்: இன்று எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு உடல்நலம் சற்று பாதிக்கும். பழைய கடன்களை தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மீனம்: இன்று தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.