மேஷம்: இன்று உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்குத் தேவையான போதிய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு தடங்கல் ஏற்படும்.
ரிஷபம்: வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். வீட்டு பராமரிப்பு காரியங்கள் நிறைவேறும்.
மிதுனம்: அலுவலகத்தில் உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்படும். மன நிம்மதிக்காக ஆன்மிக செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக சம்பாதித்தாலும் இன்று தேவையற்ற சில காரியங்களுக்காக செலவு செய்ய நேரலாம். தூக்கமின்மையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கடகம்: கணவன் - மனைவி இடையே மோதல் உண்டாகும். உங்களின் சம்பளம் குறைவாக இருப்பதன் காரணமாக பணத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலக பணிகள் குறித்து திட்டமிட்டு ஒழுங்காக பணியாற்ற வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் பற்றி கவலை அதிகரிக்கும்.
சிம்மம்: இன்று நீங்கள் முக்கிய
முடிவுகள் எடுக்க உகந்த நாள். உடல் ஆரோக்கியமும் சிறந்த முறையில் இருக்கும். வெளியூர் பணம் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கன்னி: இன்று நாள் முழுவதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். கணிசமான பண வரவு காணப்படும். அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாக அமையும்.
துலாம்: அலுவலகத்தில் முறையாக திட்டமிடுவதன் மூலம் இன்று சிறப்பாக பணியாற்றலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்: இன்று நீங்கள் சில கடினமான சவாலான சூழ்நிலையை கையாள வேண்டியிருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இது உங்களுக்கு தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்தும். பணத்தேவை காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தனுசு: இன்று எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையாக செயல்படவும். உடன் பிறந்தவர்களுக்கு உங்களுக்கு துணையாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பல பிரச்னைகள் சரியாகும். பிடித்த பொருட்களை இன்று வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகமாக இருக்கும்.
மகரம்: புதிய பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து சென்றால் நிம்மதி கிடைக்கும். முக்கிய
முடிவுகள் எடுக்கும் போது யோசித்து செயல்படவும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும்.
கும்பம்: இன்று நாள் முழுவதும் உடல் சோர்வாக காணப்படும். அலுவலகத்திலும் பணிகள் அதிகமாக காணப்படும். குடும்ப பிரச்னை காரணமாக உங்கள் மனைவியுடன் மோதல் காணப்படும். தேவையற்ற சில செலவுகள் ஏற்படும். சவால்களை மேற்கொள்ள நீங்கள் சரியாக திட்டமிட வேண்டும்.
மீனம்: கவனக்குறைவு காரணமாக
வேலை செய்யும் இடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் தேவையின்றி அதிக பண செலவு செய்வீர்கள். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். சிலருக்கு வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.