இன்றைய ராசிபலன் (15-08-2023)

50518பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையாக இருங்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நல்ல நாள். இன்று நீங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படுவீர்கள். உங்கள் சுய முன்னேற்றத்தில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று நல்ல நாள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இல்லை. சிறிதளவு கடினம் தான் காணப்படும். நீங்கள் இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுமையுடன் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்படும். அதிக உழைப்பின் காரணமாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மன உளைச்சல் ஏற்படும். இதனை போக்க இசைகளை கேட்டு மகிழுங்கள் அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட்டு மனதை மாற்றுங்கள். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீட்டில் தேவையில்லாத விஷயங்களால் மனஸ்தாபம், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக வலிமையும் உறுதியும் தேவை. உங்கள் கவனத்தை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்று நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், போதுமான பணவரவு இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள். இன்று முக்கியமான முடிவுகளை சுயமாக எடுக்க வேண்டும். எந்த ஒரு புதிய முடிவை எடுக்கும் போதும் நன்றாக யோசித்து எடுக்கவும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். தைரியமும் உறுதியும் வழிகாட்டும். இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் அதிகாரிகளால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வித நற்பலன்களும் கிடைக்காது. நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும். இன்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பெண் அல்லது பிள்ளையின் திருமணம் தொடர்பான முயற்சி சாதகமாக முடியும். தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மன உளைச்சல் ஏற்படும். இசையை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நல்ல நாள். தொடர் முயற்சி மூலம் சுய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நினைத்த செயலை இன்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் இணக்கமாக நடந்து கொள்ள இன்றைய நாளை பயன்படுத்துங்கள். கும்பம்: இந்த ராசிக்காரர்கள் இன்று துடிப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை காணப்படும். எதிர்கால நன்மை கருதி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும். இன்று எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மீனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று தகவல் பரிமாற்றத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பலன்கள் தாமதமாக கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். பணியைப் பொறுத்த வரை கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி