ஆரத்தி எடுத்த பெண்.. பணம் கொடுத்த அண்ணாமலை?

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோவையில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை பணம் கொடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என கோவை தேர்தல் அதிகாரி தகவல்கூறியுள்ளார். ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் தந்ததாக வெளியான வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட வீடியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி