30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவில் கதவுகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் கதவுகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. முர்ரான் கிராமத்தில் உள்ள இந்த பராரி மௌஜ் கோவிலில் காஷ்மீரி பண்டிட்டுகள் சிறப்பு பூஜை செய்தனர். முர்ரான் கிராமத்தைச் சேர்ந்த அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் இணைந்து ஆலயக் கதவுகளைத் திறந்தனர். இதையொட்டி சிறப்பு பூஜையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இரு சமூகத்தினரும் இணைந்து ஹோமம் செய்தனர். கோயில் திறக்கப்பட்டதால் ஊர் புலம்பெயர் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி