மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. 7 கொள்ளையர்கள் கடை ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி பைகளில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளுடன் தப்பி ஓட முயன்றனர். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மொண்டல் அவர்களை தடுக்க முயன்றார். ரூ.2.5 கோடி மதிப்புள்ள நகைகளை அங்கேயே வைத்துவிட்டு ரூ.1.8 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.