டெல்லியின் காஜியாபாத்தில் சமீபத்தில் சாலை விபத்து நடந்தது. மீரட் விரைவு சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்றவர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் வந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.