வரலட்சுமி திருமணம்: விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு அழைப்பு

62பார்த்தது
வரலட்சுமி திருமணம்: விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு அழைப்பு
நடிகை வரலட்சுமி சரத்குமார், 39 வயதை கடந்துள்ள நிலையில், நிக்கோலாய் சச்தேவ் என்பரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிக்கோலாய், தனது மனைவியை பிரிந்துவிட்ட நிலையில், தற்போது வரலட்சுமியை திருமணம் செய்ய உள்ளார். வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி