சென்னையில் பரவலாக பெய்துவரும் மழை

68பார்த்தது
சென்னையில் பரவலாக பெய்துவரும் மழை
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஆனாலும், நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், சென்னையில் இன்றும் மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணி முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசோக் நகர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கிண்டி, சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி